மே தினக் கூட்டங்களால் அதிரப்போகும் கொழும்பு!

Share

பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறைவு செய்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வுகள் கொழும்பு — பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு மே தின நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு ஏ.ஈ.குணசிங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் மே தினப் பேரணி இம்முறை கொழும்பு பி.ஆர்.சி. மைதானத்திலிருந்து ஆரம்பமாகி விஹாரமகாதேவி பூங்காவைச் சென்றடையவுள்ளது. அந்தப் பூங்காவுக்கருகில் மே தினக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மே தினக் கூட்டத்தை கண்டி பொதுச் சந்தைக்கு முன்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு