மஹிந்தவின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் பிரமுகர்கள்!

Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீவிர அரசியல் செயற்பாட்டைத் தொடங்கியதுதான் தாமதம் அவரது வீட்டுக்கு அடிக்கடி பல முக்கிய பிரமுகர்கள் வந்து போகின்றார்கள்.

அவர்களுள் முக்கியமான வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரும் அடங்குகின்றார். அவர்தான் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங்.

அவர் இப்போதெல்லாம் அடிக்கடி மஹிந்தவின் விஜேராம வீட்டுக்குச் சென்று மஹிந்தவுடன் நீண்ட நேரம் பேசிவிட்டுப் போகின்றார்.

சீனா என்றாலே ஊடகங்கள் விழிப்படைவது வழமைதானே. அப்படித்தான் இந்த விடயத்திலும் ஊடகங்கள் விழிப்படைந்துள்ளன.

மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவதில் சீனா மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது என அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு