நானுஓயாவில் உணவு ஒவ்வாமையால் 26 மாணவர்கள் வைத்தியசாலையில்!

Share

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகல் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட உணவை அருந்திய வேளை மாணவர்களுக்கு மயக்க நிலை, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.

உணவருந்தியவர்களில் 26 இற்கும் அதிகமான மாணவர்கள் வயிற்று உபாதைக்கு உள்ளாகியதைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு