திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு தாண்டவம்! – மக்களுக்கு எச்சரிக்கை

Share

திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண தொற்று நோய் தடுப்பு வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ். அருள்குமரன் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 600 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை நகரத்தை அண்டிய பகுதிகளில் 325 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயின் தாக்கம் காரணமாக உப்புவெளிப் பிரதேசத்தில் 6 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நோயின் தாக்கத்தால் திருகோணமலை நகரப் பகுதி, உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் கிழக்கு மாகாண தொற்று நோய் தடுப்பு வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு