நெடுந்தீவு கூட்டுப் படுகொலை: படுகாயமடைந்த 100 வயது மூதாட்டியும் சாவு!

Share

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

100 வயது மூதாட்டியான க.பூரணம் இன்று மாலை உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 3 பெண்களும், 2 ஆண்களும் உயிரிழந்தனர். 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

குறித்த கொலைச் சம்பவத்தில் திருடிய நகைகளுடன் தப்பித்த பிரதான சந்தேகநபர் புங்குடுதீவில் வைத்து அன்றிரவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்தின்போது தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நாயும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு