‘மொட்டு’க் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோருக்கு மஹிந்த தரப்பு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகின்றது.
இந்தத் தகவலை விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
மஹிந்த தரப்புடன் வந்து இணையுமாறு அமைச்சர் டிரான் அலஸின் ஊடாகப் பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டது எனவும், இப்போதும் இந்த அழைப்பு தொடர்கின்றது என்றும் அவர் கூறினார்.
தாம் நிலையான கொள்கையில் இருப்பதால் அந்த அழைப்பை நிராகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.