அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து வெளிநாடு ஒன்றுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
அவர் அண்மையில் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அவர் விமானத்தில் அமைச்சர் ஒருவருக்கான வசதியைப் பெறாது சாதாரண பயணிகள் அமரும் ஆசனத்தில் அமர்ந்தே சென்றார்.
ரஷ்யாவுக்கு செல்வதற்கு 9 மணி நேர பயணம். அவர் ரஷ்யாவில் இறங்கும் வரை அப்படியே சென்றார்.
இதனால் அவர் ஒரு தொகைப் பணத்தை அரசுக்கு மீதப்படுத்திக் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல, அவரது பயணத்துக்காக அமைச்சால் வழங்கப்பட்ட எந்த நிதியையும் அவர் பெறவில்லை. அவர் சொந்தப் பணத்தையே செலவழித்துள்ளார்.