வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இரு மாகாணங்களிலும் முக்கிய நகரப் பகுதிகள், வீதிச் சந்திகள் என்பவற்றில் ஆயுதம் ஏந்திய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வன்முறைகள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராகவும், தமிழர் பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் – மரபுரிமைகள் அழிப்புக்கு எதிராகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.