ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் அரசுடன் மூன்று கட்டங்களாக இணையவுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் பலர் அரசுடன் இணையப் போகின்றார்கள் என்பது நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வருகின்று. அதில் புதுத் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அவர்கள் ஒரே தடவையில் அல்லாது மூன்று கட்டங்களாக இணையவுள்ளார்கள் என்பதுதான்.
முக்கியமான பலர் அதற்குள் அடங்குகின்றனர் என்றும், இது தொடர்பில் அவர்கள் ரணில் அரசு தரப்புடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
அரசுடன் இணையவேமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் சிலர் உள்ளனர் என்றும், அவர்களுக்கும் சேர்த்தே ஜனாதிபதி கதவைத் திறந்து வைத்துள்ளார் என்றும் ரணில் தரப்புத் தகவல் தெரிவிக்கின்றது.