ஈ.பி.டி.பி. முன்னாள் தவிசாளரும் இன்னும் இருவரும் கைது!

Share

யாழ்., தீவகத்தில் முறையற்ற வகையில் காணி ஒன்றை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவுப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சசிகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மோசடிக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளரும், தவிசாளரின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 சகோதரர்களுக்கு இடையே பிரிவிடல் செய்யப்பட்டவேண்டிய ஆதனத்தை ஒரு சகோதரர் மட்டும் முறையற்ற வகையில் தனது பெயருக்கு மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவுப் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் நேற்றுக் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

நெடுந்தீவு உள்ள ஆதனம் 12 சகோதரர்கள் இடையே பிரிவிடல் செய்யப்பட வேண்டும். எனினும் அந்த ஆதனத்தை சகோதரர்களில் ஒருவரான நெடுந்தீவுப் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் சசிகரன், சட்டத்துக்குப் புறம்பாக தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் மற்றைய சகோதரர், பங்கு ஆதனம் சட்டத்துக்கு புறம்பாக மோசடியாக விற்பனை செய்துள்ளமையை அறிந்து யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினர் விசாரணையை மேற்கொண்டனர்.

மோசடியாக ஆதனத்தை உரிமம் மாற்றிய நெடுந்தீவுப் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் நல்லதம்பி சசிகரனைக் கைது செய்தனர். இவர் ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்தவர்.

அவரது மோசடியாக முடிக்கப்பட்ட உறுதிக்கு சாட்சிக் கையொப்பமிட்ட முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் ஒருவரும் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மூவரும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு