சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்ததன் பின் தேசிய அரசை அமைத்து புதிய அமைச்சரவையை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்று தெரியவருகின்றது.
தேசிய அரசு ஒன்றை அமைப்பதுதான் ஜனாதிபதியின் பிரதான திட்டம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய அவர் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின் கட்சிகளுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளார்.
அந்த அழைப்பை ஏற்று அரசுடன் இணையும் கட்சிகளை வைத்து தேசிய அரசை ஜனாதிபதி உருவாக்கவுள்ளார்.
அவ்வாறு இணைந்தாலும்கூட கட்சிகளின் விருப்பத்துக்கு ஏற்ப அமைச்சுப் பதவிகள் வழங்கப்படமாட்டாது என்றும், எவ்வாறு வழங்குவதென்று தானே முடிவெடுப்பேன் என்றும் சில நாட்களுக்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் சிலருடன் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.