மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, புதிய இலக்குடன் வெற்றியை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த மிகப் பெரிய கட்சியாகும். அந்தக் கட்சி இப்போது வீழ்ந்து கிடக்கின்றது. அதை இனியாவது வெற்றிமிக்க கட்சியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தோன்றியுள்ளது.
கட்சியில் இருந்து பிரிந்து சென்ற எம்.பிக்கள், ஆதரவாளர்கள் எல்லோரையும் மீண்டும் இணைத்து புதுப் பயணம் ஒன்றைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டுள்ளார் மைத்திரி.
இதன் முதல் கட்டமாக கட்சியில் இருந்து அரசில் இணைத்துக்கொண்ட 9 எம்.பிக்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்த மைத்திரி தொடங்கியுள்ளார். அவரது வீட்டில் பல சுற்றுச் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை மீண்டும் பலப்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் விளைவாக மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையில் அண்மையில் நாடாளுமன்றில் சந்திப்பொன்று இடம்பெற்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரியை அரசில் இணைத்து அதில் இருந்துகொண்டே சு.கவை’ப் பலப்படுத்துவதற்கான நகர்வு இது என்று சொல்லப்படுகின்றது.