அதிக வெப்பத்தால் மக்களுக்கு மனநோய் அபாயம்! – வன்முறையும் வெடிக்கக்கூடும்

Share

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மனநல நோய்கள் அதிகரிக்கலாம் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்தார்.

இதனால் மக்கள் வன்முறைக்கு உள்ளாக நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக மக்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடலாம் எனச் சுட்டிக்காட்டிய மனநல மருத்துவர் ரூபி ரூபன், இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மனநோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்குத் தாகம் குறைவதாகவும், அதனால் அவர்கள் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாகவும் மனநல மருத்துவர் ரூமி ரூபன் மேலும் கூறினார்.

இதேவேளை, அதிக வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைவடையக்கூடும் எனவும், இதனால் பிள்ளைகளுக்குக் கல்விச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலைமை மே மாதம் இறுதி வரை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு