“நாட்டை மீட்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அனைத்துத் தரப்பினரும் இணைந்து ஆட்சியமைப்போம் என ஜனாதிபதி ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு எதிர்க்கட்சிகள் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தவில்லை.
நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையைத் தீர்க்கும் நோக்கிலேயே தற்போதைய ஜனாதிபதிக்கு நாம் ஆதரவு வழங்கினோம். எமது எதிர்பார்ப்பை அவர் நிறைவேற்றியுள்ளார். நாட்டை மீட்கும் அவரின் முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்” – என்றார்.