நாட்டில் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் தேவைக்காக தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
தேசிய அரசு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய அரசாங்கம் அமைப்பதாக இருந்தால் அதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். தற்போதுள்ள அரசாங்கத்தில் மொட்டுக் கட்சியைச் சேர்ந்த 4 அமைச்சர்கள் உள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர்கள் இருவர் உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் இருவர் உள்ளனர். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர். அதனால் இதுவும் ஒரு தேசிய அரசாங்கம்தான்.
எதிர்காலத்தில் திட்டமிட்ட கலந்துரையைாடல்கள் மூலம் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும்” – என்றார்.