கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடர் மாடி வீட்டுத் திட்டப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேகநபர் கைதானார்.
பெரியநீலாவணை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.டி.துஷார திலங்க ஜெயலால் வழிகாட்டலுக்கு அமைய பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான டி.தினேஷ் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்துக்கிடமான நபரைக் கைது செய்தனர்.
இதன்போது சந்தேகநபர் வசம் இருந்து 860 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 35 வயதுடைய சந்தேகநபரைக் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மேலதிக விசாரணைகளைப் பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.