புதிய அமைச்சரவை நியமனம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. இதோ நியமிக்கின்றேன், அதோ நியமிக்கின்றேன் என்று இழுத்தடித்துக்கொண்டே இருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இதனால் தனியாகச் சென்று பல தடவைகள் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச.
‘மொட்டு’வில் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க முடியாது என்று ஒவ்வொரு தடவையும் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் ஜனாதிபதி.
அப்படியென்றால், குற்றச்சாட்டுக்கள் இல்லாதவர்களுக்கு வழங்குங்கள் என்று கூறி வருகின்றார் பஸில். அதற்கும் ஜனாதிபதியிடமிருந்து உரிய இல்லை என்று தெரியவருகின்றது.