தேசிய அரசமைப்பது தொடர்பான யோசனையை அரசு முன்வைக்கும் பட்சத்தில், அதற்கு அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய அரசு தொடர்பான யோசனையை 2007 ஆம் ஆண்டு நான் முன்வைத்தபோது அதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. இதையடுத்து நாம் அரசுடன் இணைந்தோம். நாட்டை மீட்டோம்.
அன்று போலவே இன்றும் நெருக்கடி உள்ளது. எனவே, நாட்டை மீட்கக் கட்சி பேதம் பாராது அனைவரும் ஒன்றுபட வேண்டும்.” – என்றார்.