இ.போ.ச. பஸ் கோர விபத்து! – ஒருவர் சாவு; 10 பேர் படுகாயம் (Photos)

Share

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பஸ் கிளிநொச்சி டிப்போக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு