அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா மேலும் ஒரு வாரத்துக்கு அமுல்!

Share

சித்திரைப் புத்தாண்டு காலத்துக்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா மேலும் ஒரு வாரத்திற்கு அமுலில் இருக்கும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்ட நாட்களில் பதிவான நுகர்வு உள்ளிட்ட தரவுகளை ஆராய்ந்ததன் பின்னரே அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டாவைத் தொடர்ந்தும் வழங்குவதா, இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டா திருத்தப்படும் திகதி குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கோட்டாவை அதிகரிப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன் பிரகாரம், முச்சக்கர வண்டிக்கான 5 லீற்றர் எரிபொருள் கோட்டா, 8 லீற்றராக அதிகரிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளுக்கான கோட்டா 4 லீற்றர் முதல் 7 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டது.

பஸ்ஸுக்கான எரிபொருள் கோட்டா 40 லீற்றர் முதல் 60 லீற்றராக அதிகரிக்கப்பட்டதுடன், காருக்கான எரிபொருள் கோட்டா 30 லீற்றராக அதிகரிக்கப்பட்டது.

வானுக்கான எரிபொருள் கோட்டா 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டது.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு