“நாடாளுமன்றம் எதிர்வரும் 25ஆம் திகதி கூடும்போது தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
‘டெய்லிமிரர்’ ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்வரும் 25ஆம் திகதி ஐ.எம்.எப். ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் சமர்ப்பிப்பார். அதன் பின்னர் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவைக் கோருவார். அன்றைய தினம் நானும் ரவூப் ஹக்கீமும் தேசிய அரசாங்கம் அமைக்க ஆதரவு வழங்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுப்போம்” — என்றார் மனோ.