அனைத்துச் சட்டத்தரணிகளும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்! – சரவணபவன் அழைப்பு

Share

அனைத்துச் சட்டத்தரணிகளும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாக முன்வாருங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார்.

“தீவகத்துக்கான நுழைவாயிலான பண்ணைச் சுற்றுவட்டத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள நாகபூஷணி அம்மன் சிலை தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதில் இந்து அமைப்புக்கள் ஒன்றிணைந்து முன்னிலையாகுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்து அமைப்புக்களுக்கு ஆதரவாக அனைத்துச் சட்டத்தரணிகளும் நீதிமன்றில் முன்னிலையாக முன்வரவேண்டும்” – என்றார் சரவணபவன்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு