ஏப்ரல் 25 இல் நாடாளுமன்றத்துக்குள்ளே தமிழ் எம்.பி.க்கள் மறியல் போராட்டம்!

Share

எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு முன்வைக்கப்படுகின்றது. அன்றையதினம் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாடாளுமன்றத்தினுள் வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளார்கள்.

அதேநாளில் தமிழர் தாயகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முழு அடைப்புப் போராட்டத்துக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவுக்கு எதிர்ப்பு வெளியிடுவது மாத்திரமல்லாமல் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பை வெளிக்காட்டுவது இதன்நோக்கமாகும்.

இந்தப் போராட்டத்துக்கு முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகளும் ஆதரவை வழங்கவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு