“அமைச்சுப் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தவொரு அழுத்தத்தையும் எமது கட்சி கொடுக்கவில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அமைச்சர்களை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கின்றது. அந்த அதிகாரத்தை நாம் சவாலுக்கு உட்படுத்தவில்லை. மாறாக இவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் சிறப்பு எனக் குறிப்பிட்டு பட்டியலொன்றை வழங்கியிருந்தோம்.
அதேவேளை, ரோஹித அபேகுணவர்தன போன்றவர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை.” – என்றார்.