அமைச்சுப் பதவிக்கு அடம்பிடிக்கும் ‘மொட்டு’

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால், அதே மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.

ரோஹிதவுக்கு இன்றி ராஜிதவுக்கு மாத்திரம் அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் என்றும் ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரோஹித அபேகுணவர்தன கட்சியின் வளர்ச்சிக்காக அதிக அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர் எனவும், இந்நிலையில் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் அது பாரிய அநீதி எனவும் ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளது.

ராஜித சேனாரத்ன விரைவில் புதிய அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக கடந்த சில வாரங்களாகச் செய்திகள் வெளியாகின.

இதேவேளை, அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெயர்ப்பட்டியலும் கடந்த காலங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு