கண்டி மாவட்டத்துக்குட்பட்ட, கம்பளை, ஹேம்மாத்தகம வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஆஸ்திரேலியப் பெண்ணொருவர் (வயது – 67) பலியாகியுள்ளார்.
ஹேம்மாத்தகம நோக்கிப் பயணித்த கார் 12 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது சாரதி, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகள் ஆகியோர் காரில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மூவரும் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளார்.
சாரதியின் கவனமின்மையே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.