ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் அக்கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மொட்டுக் கட்சியின் தற்போதைய தலைவராக மஹிந்த ராஜபக்ச செயற்படுகின்றார். செயற்பாட்டு அரசியலுக்கு விடைகொடுக்கும் நிலைப்பாட்டிலேயே அவர் இருக்கின்றார்.
அத்துடன், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குக் கட்சியைத் தயார்படுத்தும் விதத்திலுமே மஹிந்த இந்த முடிவை எடுத்துள்ளார்.
அந்தவகையில் கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்சவைத் தலைவராக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், நாமல் ராஜபக்சவுக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என மற்றுமொரு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது. மொட்டுக் கட்சியின் விசேட கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இதன்போது இவ்விவகாரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.