யாழ்., வேலனை 6ஆம் வட்டாரத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்து குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் இராசதுரை ரமணன் (வயது – 52) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கிணற்றுக் கட்டில் சறுக்கி அவர் விழுந்து உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.