விராட் கோலிக்குப் பின் அடுத்த சிறந்த துடுப்பாட்ட வீரர் இவர் தான் என இந்திய இளம் வீரரை பாகிஸ்தான் முன்னாள் வீரர் புகழ்ந்துள்ளார்.
இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றது. அனைத்து அணிகளும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்து வெற்றிக்காக கடுமையாகப் போராடி வருகின்றனர்.
இந்தத் தொடரில் ஏப்ரல் 13 அன்று மொஹாலியில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வீரர் சுப்மன் கில் 49 பந்தில் 67 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இந்த ஆட்டத்தில் சுப்மன் கில்லின் அரைச் சதத்தின் உதவியுடன் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், விராட் கோலிக்குப் பிறகு அடுத்த சிறந்த துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில் இருப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது,
“அவருக்கு (கில்) அதிக திறன் உள்ளது, அவருக்கு அதிக நேரம் உள்ளது. அவர் ஆடும் போது இயற்கையாகவே அழகாக உள்ளது. அவர் சிறந்த துடுப்பாட்ட வீரர்.
அவருக்கு அடித்து ஆட நிறைய நேரம் உள்ளது. அவர் அதிக ஓட்டங்களைச் சேர்ப்பது மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.
விராட் கோலிக்குப் பிறகு அடுத்த சிறந்த துடுப்பாட்ட வீரராக சுப்மன் கில் இருப்பார் எனப் பலர் கணித்துள்ளனர்.
அவரிடம் ரோகித் சர்மாவை போல் திறமை உள்ளது. மேலும் அவரது குணமும் மிகவும் வலிமையானது. மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒருநாள், ரி 20) அவர் பந்து வீச்சாளர்களைத் துன்புறுத்துகின்றார்.
இளம் வயதில் அவர் பல்வேறு சாதனைகளை ஏற்கனவே படைத்து விட்டார். வானமே எல்லை அவருக்கு.” – என்றார்.