ரணிலை விடவும் திறமையான வேட்பாளர்கள் ‘மொட்டு’வில்! – சாகர சொல்கின்றார்

Share

“அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை விடவும் திறமையான வேட்பாளர்கள் மொட்டுக் கட்சியில் உள்ளனர்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை மொட்டுக் கட்சி எடுத்துள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே எமது கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவார். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. தற்போது அது பற்றி அறிவிப்பது ஏற்புடையது அல்ல. ரணில் விக்கிரமசிங்கவை விடவும் திறமையான வேட்பாளர்கள் எமது கட்சியில் உள்ளனர்.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு