முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் புத்தாண்டுக் கொண்டாட்ட ஆயத்தங்கள் தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நாளை தமிழ் – சிங்கள புத்தாண்டு பிறக்கவுள்ளது. பண்டிகையை முன்னிட்டு மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் பலகாரங்கள் தயாரிக்கும் காணொளியே தற்போது வெளியாகியுள்ளது.
அந்தக் காணொளியில் மஹிந்தவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ச பலகாரங்களைப் பொரிக்கின்றார். மஹிந்த அருகில் இருந்து பார்வையிடுகின்றார். மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வன் நாமல் ராஜபக்ச தனது குழந்தையுடன் அதிலிருந்து பலகாரங்களை உண்ணும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.