“ஆளுமைகளில் ஒருவரை இழந்துள்ளது தமிழ் ஊடகத்துறை!”

Share

இலங்கைத் தமிழ் ஊடகத்துறை ஆளுமைகளில் ஒருவரை இழந்துள்ளது என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகத்தின் மறைவு தொடர்பில் ஒன்றியம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

1998ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு விடுதலையானதன் பின்னர், தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை மையப்படுத்தி சங்கமொன்றை உருவாக்க வேண்டுமென்ற சிந்தனைகளைக் கொண்டிருந்தவர்களில் மாணிக்கவாசகமும் ஒருவராக இருந்தார்.

அத்துடன், குறித்த சிந்தனையைச் செயல் வடிவப்படுத்துவதில் ஏனைய ஊடகவியலாளர்களுக்கு உந்துசக்தியாகவும் அவர் விளங்கினார்.

இதையடுத்து உருவான தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைமை பதவியை அவர் இரண்டு தடவைகள் வகித்திருந்தார்.

அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு