வீடொன்றில் இருந்து ஆண் பொறியியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்படுள்ளார்.
குறித்த பொறியியலாளர் கஹதுட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில் தனது வீட்டில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பொறியியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கஹதுட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.