பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டு, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் கற்பித்தல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது.
தொழிற்சங்க சம்மேளன உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் ஆரம்பமான கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது என்று பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹெக்க இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.