பரந்தன் ரயில் நிலையத்துக்குள் புகுந்து குண்டர்கள் தாக்குதல்! – இருவர் படுகாயம் (Photos)

Share

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் ரயில் நிலையத்துக்குள் புகுந்த குண்டர்கள் நடத்திய தாக்குதலில் ரயில் நிலைய அதிபர் உட்பட ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.

பரந்தன் ரயில் நிலையப் பகுதியில் நேற்றிரவு மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என்று ஊழியர்களால் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த குண்டர் கும்பல் பரந்தன் ரயில் நிலைய ஊழியர்களைத் தாக்கிக் காயப்படுத்தியதுடன், ரயில் நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

சந்தேகநபர்களைக் கைது செய்ய விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ரயில் நிலைய அதிபர் உட்பட இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு