வவுனியாவைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் இன்று அதிகாலை காலமானார்.
பி.மாணிக்கவாசகம் என அறியப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களுக்குச் செய்தியாளராகப் பணிபுரிந்துள்ளார்.
இவர் கடந்த போர்க் காலத்தில் துணிச்சலுடன் பல சவால்களை எதிர்கொண்டு மக்களுக்காக ஊடகப் பணியாற்றியுள்ளார்.
பல் பரிமாணங்களைக் கொண்ட இவர் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நூல்கள் என்பவற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
யாழ். ஊடக அமையம் 2019 ஆம் ஆண்டு மயில்வாகனம் நிமலராஜன் ஞாபகர்த்தமான நெருக்கடியான சூழலில் அறிக்கையிடல் பணிக்கான விருதை இவருக்கு வழங்கிக் கௌரவித்திருந்தது.
‘வாழ்நாள் சாதனையாளர்’ என்ற மேலும் பல்வேறு விருதுகளைப் பல்வேறு அமைப்புக்களில் இருந்து இவர் பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா, வைரவப்புளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை (13) காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் என்றும், காலை 9 மணிக்கு தட்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் என்றும் அன்னாரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
‘விழிகள்’ இணையத்தளம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரது குடும்பத்தினருக்குக் தெரிவித்துக்கொள்கின்றோம்.