தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி நாளாந்தம் இயங்கும் இ.போ.ச. பஸ்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 300 பஸ்களை இன்று முதல் சேர்த்துள்ளது இலங்கை போக்குவரத்து சபை.
இந்த விசேட போக்குவரத்துச் சேவைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் இயங்கும் என்றும், புத்தாண்டு தினத்தன்று பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.