மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் எந்தவொரு சட்டமூலத்துக்கும் அல்லது சட்டத்துக்கும் இணங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அதன் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி. ஊடகங்களிடம் இதனைக் கூறினார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பயங்கரவாதத்தின் சில வரையறை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.