உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறமாட்டாது.
தேர்தல் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னரே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. எனினும், நிதி கிடைக்காததால் தேர்தல் பிற்போடப்பட்டது.
பின்னர் ஏப்ரல் 25 தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது. அந்த நாளும் தற்போது பிற்போடப்பட்டுள்ளது.