பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை! – ஐரோப்பிய ஒன்றியம் விசனம்

Share

இலங்கையின் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடு செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் டெனில் சைபி இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைகளை வழங்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எடுக்க வேண்டிய முடிவுக்கு முன்னதாகவே இந்தப் புதிய மாற்றுச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டமூலத்தை ஏற்காது ஜி.எஸ்.பி. பிளஸ் ஏற்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் நீடிக்கத் தவறினால், இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகச் சலுகை கிடைக்காமல் போகக்கூடும்.

ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத அமைப்புகளை அடையாளப்படுத்தும் போது நீதித்துறை மற்றும் பொது மக்களது தகவல்களின் அடிப்படையிலான செயல்முறையால் முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும், இலங்கையில், இந்தச் செயல்முறை மிகவும் குறைவான வெளிப்படைத் தன்மையைக் கொண்டுள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு