மே தின நிகழ்வை பிரமாண்டமாக நடத்த ஐ.தே.க. தீர்மானம்!

Share

மே தின நிகழ்வுகளை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

மே முதலாம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஐ.தே.கவின் மே தினப் பேரணி ஆரம்பமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சி முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் மே தினக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தலைமையில் மே தினப் பேரணி ஏற்பாடு செய்யப்படுகின்றது எனவும், சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும் மே தினப் பேரணியில் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். .

கொரோனா நெருக்கடி காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மூன்று வருடங்களாக மே தினக் கூட்டங்களை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு