மதக்கும்பலின் அட்டூழியம் ஜனாதிபதியின் கவனத்துக்கு!

Share

‘உதயன்’ பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து குழுவொன்று அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் தலைமையிலான குழு ஒன்று யாழ்ப்பாணம் – கஸ்தூரியார் வீதியில் உள்ள ‘உதயன்’ பத்திரிகை தலைமையகத்துக்குள் நேற்று மதியம் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், ஊடகங்களை அச்சுறுத்தும் இவ்வாறான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த விடயம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றும் ஜனாதிபதி செயலர் சமன் எக்கநாயக்கவால், உதயன் நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு