“கடந்த வருட ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிறந்த நடவடிக்கைகளால் இந்த வருடம் முன்னோக்கிச் செல்கின்றது. இந்நிலையில், எமது நாட்டைப் பின்னோக்கி நகர்த்த எவரும் சதி செய்யக்கூடாது என்று விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.”
– இவ்வாறு போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
“நாடு மீதும் மக்கள் மீதும் அக்கறை உள்ளவர்கள் சதி முயற்சிகளுக்குத் துணைபோகமாட்டார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்
இந்தியக் கடன் உதவியின் கீழ் இலங்கைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட 26 புதிய பஸ்களை கண்டி மாவட்டத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“கடந்த வருடத்தை விட இந்த வருடம் புத்தாண்டு மிகவும் சுபமானதாக அமைந்திருக்கின்றது. அடுத்த வருடத்தை இன்னும் சிறப்பாக மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு முழு இலங்கை மக்களுக்கும் இருக்கின்றது” – என்றும் அவர் மேலும் கூறினார்.