ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார்.
பொதுமக்களால் இதற்கான சான்றளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையைப் பேச வேண்டும் என்ற அடிப்படையில் தமது தனிப்பட்ட கருத்து மட்டுமல்லாமல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் மக்களும் இதனையே கூறுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், அரச கட்சியில் இணைந்துகொள்வது தொடர்பான திட்டங்கள் தம்மிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ராஜித சேனாரத்ன உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணிலுக்குச் சார்பாக இதே போன்ற கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.