ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 14 வயது சிறுவன் பரிதாபச் சாவு!

Share

மரக்கிளையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிறு, கழுத்தில் இறுகியதில் 14 வயதான சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கிரிஉல்ல போபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது உயிரிழந்த சிறுவனின் தாயும் இளம் சகோதரரும் பூப்பறிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியேறி சென்றிருந்தனர் என்றும், மூத்த சகோதரி குளியல் அறையில் இருந்துள்ளார் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

தாய் வீட்டுக்கு வரும்போது மகன், ஊஞ்சல் கயிற்றில் இறுகியிருப்பதைக் கண்டு, கயிற்றை அறுத்துள்ள தாய், மகனை தம்பதெனிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார். எனினும், குறித்த சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு