கண்டி – பேராதனையில் இளம் ஆசிரியை ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
முருதலாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணே இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனை – கொப்பேகடுவ பகுதியில் வைத்து குறித்த ஆசிரியர் கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்குபற்றச் சென்ற போதே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் இலுக்தென்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.