தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று கைவிடப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பணியாளர்கள் கடந்த நான்கு தினங்களாக பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
சுகயீன விடுமுறை கொடுப்பனவிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரியே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பணியாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கப் பெற்றதால் இன்று பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டு சேவைக்கு திரும்பியதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.