அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸாரால் கொண்டுவரப்படும் சடலங்களைப் பொறுப்பேற்க முடியாது என்று களுபோவில போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இன்று (06) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் களுபோவில போதனா வைத்தியசாலை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
அடையாளம் காணப்படாத நிலையில் வைத்தியசாலையின் அமரர் அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினாலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமரர் அறையில் 36 சடலங்களையே வைக்கமுடியும் என்பதனால் அடையாளம் காணப்படாத சடலங்களைக் கொண்டு வர வேண்டாம் என நுகேகொடை மற்றும் கல்கிஸை பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் களுபோவில போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.