196 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் சர்வதேச கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிரதிவாதிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் கடற்படையினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஹெரோயின் இறக்குமதி, கடத்தல் மற்றும் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கில், நீதிபதி ஆதித்ய பட்பெந்திகே தலைமையிலான மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (6) இந்தத் தீர்ப்பை வழங்கியது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் வழங்கிய சாட்சியங்களில் முரண்பாடுகள் உள்ளதாலும், குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதாக நீதிபதிகள் குழாம் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.