ஆட்சி மாற்றம் மிகவும் அவசியம்! – அநுரகுமார வலியுறுத்து

Share

“நாடு மீண்டெழ வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் மிகவும் அவசியம்.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

மாத்தளைப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சரிவடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஆட்சியாளர்களினதும் மக்களினதும் எதிர்பார்ப்பு ஒன்றாகவே இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தேர்தல் ஒன்றை மகிழ்ச்சியாக எதிர்நோக்கியிருந்தனர். தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தேர்தல் மேடைகளில் மூடி மறைப்பதற்காக தேர்தலை அவர்கள் எதிர்நோக்குவார்கள்.

எனினும், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. தங்களுடைய வாக்குகள் தங்களுக்கு எதிராகவே மாறியுள்ளதை ஆட்சியாளர்கள் அறிந்துள்ளனர்.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு